அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிரதமர் துன் மகாதீருக்கு பிளவுப்படாத ஆதரவை அளிக்கிறேன்! அன்வார் இப்ராஹிம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிரதமர் துன் மகாதீருக்கு பிளவுப்படாத ஆதரவை அளிக்கிறேன்! அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், மே 13-
பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்திற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும் பி.கே.ஆர். தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் அன்வார், நேற்று மாலையில் தன்னை வந்து துன் மகாதீர் சந்தித்ததாகவும் அவரது வருகைக்கும் தாம் மரியாதை அளிப்பதாகவும் கூறினார். இந்த சந்திப்பில் அவரது தலைமைத்துவத்திற்கு மீண்டும் பிளவுப்படாத ஆதரவை தெரிவித்தேன். மேலும், பேச்சுவார்த்தை முறையில் பி.கே.ஆர். கட்சிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் வகையில் தலைமைத்துவத்தின் வருத்தம் குறித்து அவரிடம் கூறினேன்.

துன் மகாதீரும் அதனை நல்ல முறையில் வரவேற்றதோடு நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் மன்றத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியதாக அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மேலும், பிரதமராக துன் டாக்டர் மகாதீரும் துணைப்பிரதமராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸாவும் இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசாங்கம் உறுதியாகவும் வலுவாகவும் இருப்பதோடு அதன் கடமையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் உறுதி செய்யப்பட வேண்டுமென எனது கருத்தை கெஅடிலான் தலைமைத்துவத்திடம் தெரியபடுத்தினேன்.

மக்கள் வழங்கிய அதிகாரத்தை ஏற்று எனது சக போராட்ட தலைவர்களும் உடனடியாக நாட்டைக் காப்பாற்றவும் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டுமென டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன