அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ம.இ.கா.வின் சொத்துடமை மீது விசாரணை வேண்டும்! பெர்ஜாம் இளைஞர் கலாசார இயக்கம் போலீஸ் புகார்
அரசியல்முதன்மைச் செய்திகள்

ம.இ.கா.வின் சொத்துடமை மீது விசாரணை வேண்டும்! பெர்ஜாம் இளைஞர் கலாசார இயக்கம் போலீஸ் புகார்

ஈப்போ, மே. 13-
ம.இ.கா.வின் கீழ் உள்ள அனைத்து சொத்துகளும் எப்படி நிர்வாகிப்படுகின்றது என்பது குறித்து இந்திய சமுதாயத்திற்கு தெளிவான விளக்கம் அவசியமென்று பெர்ஜாம் இந்திய இளைஞர் கலாசார இயக்கம் போலீஸ் புகாரை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக ம.இ.கா.வின் தற்போதைய நிலை என்ன? அதன் சொத்துகளை பராமரிப்பது யார் என்பது குறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாக அவ்வியக்கத்தின் தலைவர் அறிவழகன் கூறினார்.

இதனிடையே, நேற்று ம.இ.கா. வின் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோ ஜி குமார் அம்மான் ஒரு குரல் பதிவை வாட்சாப்பில் வெளியிட்டார். அதில் தாம் ம.இ.கா.வின் சொத்துகள் மற்றுக் நிலங்கள் குறித்த ஆவணங்களை கைப்பற்றியால் 38 நாட்களில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இந்த சொத்துகள் குறித்து மக்கள் அறிந்துக் கொள்ள அனைவரும் போலீஸ் புகார் செய்ய வேண்டுமென கேட்டும் கொண்டார்.

இதனை மையமாகக் கொண்டு இன்று மாலை 4.10 மணியளவில் ஈப்போ பெர்ஜாமில் அறிவழகன் தமது இயக்கத்தின் சார்பாக போலீஸ் புகாரை மேற்கொண்டுள்ளார்.

One thought on “ம.இ.கா.வின் சொத்துடமை மீது விசாரணை வேண்டும்! பெர்ஜாம் இளைஞர் கலாசார இயக்கம் போலீஸ் புகார்

  1. Latah Veeran

    If we have GST outstanding paymwnt with Custom with penalty 15% how….it’s is need to pay? Pls reply tq

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன