புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தே.மு. காலத்தில் பெறப்பட்ட சட்டவிரோத வரியை அரசு திருப்பி கொடுக்கும்! துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

தே.மு. காலத்தில் பெறப்பட்ட சட்டவிரோத வரியை அரசு திருப்பி கொடுக்கும்! துன் மகாதீர்

கோலாலம்பூர், மே 13-
தேசிய முன்னணியின் ஆட்சியில் தனிநபர் அல்லது வர்த்தகங்கள் வாயிலாக வசூலிக்கப்பட்ட சட்டவிரோத வரியை புத்ராஜெயா திருப்பி ஒப்படைக்கும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய கொடுமையான ஆட்சியில் தவறான முறையில் அதிகமானோருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். நமது சட்டத்திட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்ட வரியைக் காட்டிலும் பலர் அதிகமான வரியை செலுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

யார் இந்த கட்டாயத்திற்கு ஆளானது? எவ்வளவு தொகையை அவர்கள் செலுத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்? முதலானவற்றை நாங்கள் தெரிய விரும்புகின்றோம். சட்டவிரோதமாக பெறப்பட்ட இத்தகைய வரிகளைத் திருப்பி ஒப்படைப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம் என டிவி1 தொலைக்காட்சிக்கு அளித்த நேர்க்காணலில் துன் மகாதீர் கூறினார்.

சிலர் வரியை செலுத்திய பின்னரும் உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்.எச்.டி.என்) அவர்களை அதிக வரி செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது. செலுத்தவில்லை என்றால் அவர்கள் கருப்பு பட்டியலிடப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுவர் என மிரட்டப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலருக்கு பயண கடப்பிதழ், வங்கி புத்தகம் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வர்த்தகத்திற்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என நினைக்கின்றோம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன