அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமைச்சர்கள் நியமனம்: துன் மகாதீர் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள்! -நூருல் இசா
அரசியல்முதன்மைச் செய்திகள்

அமைச்சர்கள் நியமனம்: துன் மகாதீர் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள்! -நூருல் இசா

புக்கிட் மெர்த்தாஜம், மே 13-
நேற்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்த மூன்று அமைச்சர்கள் நியமனத்தை பி.கே.ஆரின் உதவித் தலைவரும் முன்னாள் பாண்டான் தொகுதி உறுப்பினருமான ரபிஸி ரம்லி நன்முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் வலியுறுத்தினார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை புதிய அரசாட்சியாக மக்கள் கொள்வதை நான் காண விரும்புகிறேன்.

அந்த வகையில் ஆட்சி முறையில் நல்ல ஒத்துழைப்பின் வழி மக்கள் மீது கவனம் செலுத்துவதுதான் இப்போது மிகவும் முக்கியமாகும். ரபிஸி ஒரு நல்ல நண்பர் என்ற முறையில் கட்சிக்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன்.

அதனால் பக்காத்தான் அரசின் கீழ் புதிய கட்டமைப்பு வாயிலாக எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாருங்கள் ஒன்றாக இணைந்து போராடுவோம் என்று பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான விருந்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நூருல் இசா கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன