புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நிதித்துறையை கேட்டேனா? சின் சியூ மீது வழக்கு தொடுப்பேன்! -ரபிஸி ரம்லி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நிதித்துறையை கேட்டேனா? சின் சியூ மீது வழக்கு தொடுப்பேன்! -ரபிஸி ரம்லி

கோலாலம்பூர், மே 14-

நிதித்துறை அமைச்சர் பதவிக்கு தாம் குறிவைத்துள்ளதாக சின் சியூ சீன நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார்.

பிகேஆருடன் கலந்தாலோசிக்காமல் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நிதியமைச்சர் பதவியை ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு வழங்கியது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த வெளியிட்டுள்ள செய்தியில் சின் சியூ அவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

சின் சியூ சீன நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டதைப் போல நிதியமைச்சர் பதவியை நான் கேட்கவில்லை என ரபிஸி குறிப்பிட்டார்.

பிகேஆரின் முதன்மைத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார், தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிசா, உதவித் தலைவர் நூருல் இசா ஆகியோரிடம் கடந்த ஆண்டே அமைச்சரவையில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தெளிவாகக் கூறிவிட்டேன்.

இந்நிலையில் சின் சியூ என் மீது அவதூறு பரப்பியுள்ளது. நான் வழக்கு தொடுப்பேன் என ரபிஸி தமது டுவிட்டர் தளத்தில் தமது நிலைப்பட்டை பதிவு செய்துள்ளார்.

அமைச்சரவையில் இடம் வேண்டுமென்றால் 4 ஆண்டுகள் சிறை செல்லும் அளவிற்கான ஆபத்தான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டிருக்க மாட்டேன். மாறாக மகாதீர், அன்வார் ஆகியோரின் கைகளைதான் முத்தமிட்டிருப்பேன் என்றும் ரபிஸி கூறியுள்ளார்.

தொடர்ந்து கேள்வி எழுப்புவதால் பலர் என்னை விமர்சிக்கிறார்கள். வெளிப்படையாக தட்டிக் கேட்க தயங்கினால் நாம் தேசிய முனனணி காலத்திற்கே செனறுவிடலாம்.

என் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் அவமானம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ரபிஸி கூறினார்.

இதனிடையே தாம் வெளியிட்ட அறிக்கை பிகேஆர் கட்சியின் நிலைப்பாடே தவிர என்னுடைய கருத்தல்ல. பிகேஆரின் நிலைப்பாட்டை உதவித் தலைவர் என்ற முறையில் நான் கூறினேன்.

அமைச்சரவை உருவாக்கப்படுவதில் அன்வாரும் இருக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம். அந்த அறிக்கைக்குப் பிறகுதான் மகாதீரும் லிம் குவான் எங்கும் அன்வாரை சந்தித்ததாகவும் ரபிஸி குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன