முகப்பு > அரசியல் > புதன்கிழமை காலை 11.00க்கு அன்வார் விடுதலை
அரசியல்முதன்மைச் செய்திகள்

புதன்கிழமை காலை 11.00க்கு அன்வார் விடுதலை

கோலாலம்பூர், மே 14-

நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கு பொது மன்னிப்பு வாரியம் மேற்கொண்ட அனைத்து நடைமுறைகளிலும் மாமன்னர் சுல்தான் முஹம்மட் V மனநிறைவு கொண்டு விட்டதாகவும் நாளை செவ்வாய்கிழமை காலை மணி 11.00க்கு அதன் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

எனினும், பிரதமர்துறை அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த கூட்டம் புதன்கிழமை காலை மணி 11.00க்கு தள்ளிவி வைக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக டத்தோஸ்ரீ அன்வார் புதன்கிழமை விடுதலையாகவிருப்பது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலை பி.கே.ஆர். உதவித் தலைவர் ரபிசி ரம்லி தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன