முகப்பு > அரசியல் > அன்வாரிடம் அவசர அவசரமாக அதிகாரத்தை வழங்குவது விவேகமானது அல்ல! துன் டாய்ம் ஜைனுடின்
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

அன்வாரிடம் அவசர அவசரமாக அதிகாரத்தை வழங்குவது விவேகமானது அல்ல! துன் டாய்ம் ஜைனுடின்

கோலாலம்பூர், மே 15-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அவசர அவசரமாக பிரதமராக நியமிப்பது விவேகமானது அல்ல என புத்ராஜெயா ஆலோசகர் மன்ற தலைவர் துன் டாய்ம் ஜைனுடின் தெரிவித்தார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை அன்வாரிடம் வழங்குவது மத்திய தவணைக் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கூறினார்.

நீங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறினால், அவர்கள் இனிமேலும் உங்கள் மீது நம்பிக்கையை வைக்க மாட்டார்கள் என ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூர் நாளேட்டிற்கு அளித்த நேர்க்காணலில் துன் டாய்ம் குறிப்பிட்டார்.

தற்போது, துன் டாக்டர் மகாதீரின் நிர்வாகத்தில் முக்கிய தலைவராக இருக்கும் துன் டாய்ம், அன்வாரை சந்தித்து இவ்விவகாரத்தைப் பற்றி பேசியதாகவும் நீங்கள் பலமுறை பொதுத்தேர்தலை சந்தித்து தோல்வியும் கண்டுள்ளீர்கள். உங்களுக்கு பிடிக்கின்றதோ இல்லையோ மகாதீர் வெற்றி பெற்று விட்டார் என தாம் கூறியதாக அவர் சொன்னார்.

அன்வாரை நாளை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 14ஆவது பொதுத்தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு அன்வார் மலேசியர்கள் மகாதீருக்கு ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு முன்பு, துன் மகாதீர் அன்வாரை விடுவிப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதாகவும் உறுதி அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன