Homeஅரசியல்சிலாங்கூர் மக்களுக்காக பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள்! வீ.கணபதிராவ் சூளுரை

சிலாங்கூர் மக்களுக்காக பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள்! வீ.கணபதிராவ் சூளுரை

ஷா ஆலம், மே 15-
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள வீ.கணபதிராவ் நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியுள்ளதால் சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து இன மக்களுக்கும் குறிப்பாக, இந்திய மக்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு மேம்பாட்டு திட்டங்களைக் கொண்டு வர முடியுமென நம்பிக்கைத் தெரிவித்தார்.

முதலாவதாக, என்னை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஜ.செ.க. கட்சியின் தலைமைத்துவம் ஆகியவற்றிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த தவணையில் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் சிலாங்கூர் மக்களுக்கு சிறப்பானதாகவும் நிறைவானதாகவும் தாம் சேவையாற்றியிருப்பதாக அநேகன்.கோம் இணையத்தள செய்தி பதிவேட்டிற்கு தொலைப்பேசி வாயிலாக அளித்த நேர்க்காணலில் அவர் கூறினார்.

எனக்கு எதிராக சில தரப்பினர்கள் பல்வேறு அவதூறுகளை தீய எண்ணத்தோடு பரப்பி வந்தனர். குறிப்பாக, வாட்சாப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இத்தகைய பொய்களை அவர்கள் பரப்பினர். நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகளை நான் தொடர்ந்த நிலையில் கடந்த கால எனது சேவைகளை கருத்தில் கொண்டு எனக்கு இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

கடந்த முறை தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றிற்கு போதிய மானியங்களைப் பெற்று தந்தேன். அதுமட்டுமின்றி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பேருந்து கட்டணம், உயர்கல்வி நிலையங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி முதலானவற்றையும் வழங்கியுள்ளேன். இம்முறை மத்திய அரசாங்கத்தையும் நாங்கள் கொண்டிருப்பதால் இன்னும் பல மேம்பாட்டு திட்டங்களையும் மக்கள் உதவி திட்டங்களையும் வழங்க முடியும்.

இன்னமும், சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் எனக்கான பொறுப்பு வழங்கப்படவில்லை. எதுவாக இருப்பினும், அதனை நிறைவாக செய்வதற்கு இலக்கு கொண்டுள்ளேன். குறிப்பாக, கடந்த முறை சிலாங்கூரில் இந்திய தொழில்முனைவர்களை உருவாக்கும் திட்டம் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோவிற்கு வழங்கப்பட்டது. ஆயினும், அதில் எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்பது தெரியவில்லை. இம்முறை எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் நிச்சயமாக சிலாங்கூரில் பல இந்திய தொழில்முனைவர்களை உருவாக்கி காட்டுவேன்.

மேலும், மத்திய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றுக்கு உதவி நிதிகள் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ளக்க்கூடாது. மாறாக, கல்வி, பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றிலும் அவர்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் முதன்மை பிரச்னையான வீட்டுடமை பிரச்னைக்கு சிறந்த தீர்வை ஏற்படுத்தி தர வேண்டுமென கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more