கோலாலம்பூர், ஜூலை 19
பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் 200 பாலர் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டுப் பற்றாக்குறைப் பிரச்னையை நிவர்த்தி செய்ய கல்வி அமைச்சு உதவும் என டாக்டர் மஸ்லி மஸ்லான் தெரிவித்துள்ளார்.
இந்த பாலர் பள்ளிகளும் நாட்டில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் அமைச்சு இப்பிரச்னைக்குத் தீர்வுக் காணும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிர்வாக ஒதுக்கீட்டு உரிமை பிரதமர் துறையின் கீழ்தான் இருக்கிறது. இருப்பினும் இவ்விவகாரத்தில் அமைச்சு தலையிடும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.





