கோலாலம்பூர், செப். 1-
ஜிஎஸ்டிக்கு பதிலான செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த இரண்டு வரிகளிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை என வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.
கைப்பேசிக்கு டோப் ஆப் செய்யும் போது 6 விழுக்காடு எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படுகின்றது.
குறிப்பாக 10 வெள்ளிக்கு டோப் ஆப் செய்யும் போது ரிம 9.43 காசுதான் சேர்க்கப்படுகின்றது. 10 வெள்ளியிலிருந்து 57 காசு எஸ்எஸ்டி வரியாக வசூலிக்கப்படுகின்றது.
ஜிஎஸ்டி வரியை போல எஸ்எஸ்டி வரியில் எந்த மாற்றமும் இல்லை என சில வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். முன்னதாக நோர் ஹயின் ஷே ஓமார், 10 வெள்ளி டோப் ஆப் செய்தபோது 57 காசு எஸ்எஸ்டி வரியாக வெட்டப்பட்டது தமது அதிர்ச்சி அளித்ததாகக் கூறியுள்ளார்.
டோப் ஆப்பிற்கு எஸ்எஸ்டி வசூலிக்கப்படக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். இதனை அரசு மறுஆய்வு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியதாக உத்துசான் மலேசியா இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.