Homeமலேசியா1 எம்.டி.பி தொடர்புடைய பணம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது !

1 எம்.டி.பி தொடர்புடைய பணம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது !

கோலாலம்பூர், செப்.2 –

1.எம்.டி.பி எனப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான கோடிக் கணக்கான பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேற்கு ஆசியா நாடுகளில் அந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 9 ஆம் தேதி நடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் பயன்படுத்த அந்த பணம் மேற்கு ஆசியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் முந்தைய தலைமைத்துவத்தின் கீழ் குறிப்பிட்ட அமைப்பு ஒன்று அந்த பணத்தை நிர்வகித்து வந்தகாகவும் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள மலேசிய வெளி உளவு அமைப்பு ,  வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை ரகசியமாக நாட்டிற்குள் கொண்டு வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாட்டுக்கு அனுப்பட்டதாகவும் அங்கிருந்து ரகசியமாக பணத்தை எடுத்து வந்ததாகவும் ,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சம்பந்தப்பட்ட அந்த அமைப்பு நாட்டிற்குள் கொண்டு வந்த பணம், மேற்கு ஆசியாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நம்புகிறது. அந்த பணம்,  ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பணமாக இருக்ககூடும் என்ற சாத்தியத்தையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மறுக்கவில்லை.

அரசாங்கத்துக்கு சொந்தமான 4 கோடியே 95 லட்சம் ரிங்கிட் பணத்தில் முறைக்கேடு நடந்திருப்பதை அடுத்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் , மலேசிய வெளி உளவு அமைப்பின்  முன்னாள் தலைமை இயக்குனரையும் அதிகாரிகள் சிலரையும் தடுத்து வைத்துள்ளது.இதுவரை 2 கோடியே 76 லட்சம் ரிங்கிட்டை தமது தரப்பு பறிமுதல் செய்திருப்பதாகவும் எஞ்சிய பணத்தைத் தேடி வருவதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ ஆசாம் பாக்கி தெரிவித்திருந்தார்.

spot_img

latest articles

explore more