Homeமலேசியாடத்தோ ஶ்ரீ ஹிஷாமுடினை விசாரிக்க தயாராகிறது எஸ்.பி.ஆர்.எம் !

டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடினை விசாரிக்க தயாராகிறது எஸ்.பி.ஆர்.எம் !

கோலாலம்பூர், செப்.2 –

நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த தலைமை இயக்குனரும் அவரின் அதிகாரிகளும் ,  செய்துள்ள அரசாங்க பண மோசடித் தொடர்பில்  முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடினையும் இரண்டு சவூதி அரேபியா இளவரசர்களையும் விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

புத்ராஜெயாவில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மலேசிய வெளி உளவு அமைப்பின் தலைமை இயக்குனர் டத்தோ ஹசானா அப்துல் ஹமிட்டின்  வழக்கறிஞர் ஷாரூடின் அலி இதனைத் தெரிவித்தார். ஹசானாவின் தடுப்பு காவலை நீட்டிப்பது தொடர்பிலான வாதத்தின் போது அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் இந்த தகவல்களைத் தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹசானவையும் அவரின் கீழ் செயல்பட்ட ஏழு அதிகாரிகளின் தடுப்பு காவலை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க புத்ராஜெயா மஜிஸ்திரெட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வெகு விரைவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஹிஷாமுடினிடம் விசாரணை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அந்த இரண்டு சவூதி இளவரசர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை பிரதிநிதித்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் எவ்வாறு இந்த விசயத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தமக்கு தெரியாது என்று ஹசானாவின் வழக்கறிஞர் ஷாரூடின் அலி தெரிவித்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஹிஷாமுடினும் , இரண்டு சவூதி அரேபியா இளவரசர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை ஹசானா மறுத்துள்ளதாக ஷாரூடின் மேலும் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more