கோலாலம்பூர், செப். 3-

விற்பனைச் சேவை வரி (எஸ்எஸ்டி) கடந்த சனிக்கிழமை அமல்படுத்தப்பட்டதில் ஒருசில குறிப்பிட்ட ரக கார்களின் விலையை பெரோடூவா நிறுவனம் குறைத்திருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர், டத்தோ டாக்டர் ஸாஹாரி ஹுசேன் தெரிவித்தார்.

இந்தப் புதிய வரியின் கட்டமைப்புப்படி பெரோடூவாவின் அனைத்து ரக கார்களின் விலையும் குறையலாம்.

இதில் தங்களின் விருப்ப காராக பெரோடூவாவைத் தேர்வுச் செய்துள்ள 33 லட்சம் மலேசியர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

அதனால் எங்களின் புதிய விலை வாயிலாக மலேசிய சந்தைகளில் சிறந்த மதிப்புடன் கார்களை நாங்கள் தருவிப்போம் என்று ஓர் அறிக்கையில் ஸாஹாரி ஹுசேன் குறிப்பிட்டார்.