Homeமலேசியாசிலாங்கூர் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது

சிலாங்கூர் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது

ஷாஆலம், செப். 4
சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

56 வயதான அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேற்று வாக்குமூலம் அளிக்க சிலாங்கூர் மாநிலத்தின் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு சென்றபோது கைதானார்.

தனது மகனின் நிறுவனத்திற்கு சொந்தமான வெ.50,000 அதிகமான சம்பந்தப்பட்ட பணம் தொடர்பில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததால் அவர் கைதானார்.

இன்று ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவரை காவலில் வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் ராஜா நோர் அடிலா ராஜா மயால்டின் பிறப்பித்தார்.

எம்ஏசிசி இவரை ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்க அனுமதி கோரியதாகவும் அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தகாகவும் கைதானவரின் வழக்கறிஞர் அகமது ஹம்சார் அகமது அஸ்லான் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more