Homeமலேசியாகுவான் எங் விடுதலையானது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் -சைட் சாடிக்

குவான் எங் விடுதலையானது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் -சைட் சாடிக்

கோலாலம்பூர், செப். 4
நிதியமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கான விளக்கம் வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் கோரியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து லிம் குவான் எங் விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை சட்டத் துறைத் தலைவர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் தமது டிவிட்டர் அகப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஏசிசி-க்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். சட்டத்துறைத் தலைவர் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்பதற்காக தாம் தொடர்ந்து குரல் கொடுக்க தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

போன்று பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வாரும் இதே போன்ற கோரிக்கையை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

சட்டத்துறைத் துறைத் தலைவர் அலுவலகம் முன்வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

நூருலுக்குப் பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின், லிம் விடுவிக்கப்பட்டது ஏன் என்று சட்டத்துறைத் தலைவர் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். சட்டத்தில் அதற்கு இடமில்லை.

மேலும், எம்ஏசிசிக்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. போலீசைப் போன்று புலன் விசாரணை செய்வது மட்டுமே அந்த ஆணையத்தின் பொறுப்பு. அதற்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுப்பது நடைமுறைக்கு முரணானது என அவர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more