Homeமலேசியாஅரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்க அரசு கடன் வாங்காது

அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்க அரசு கடன் வாங்காது

கோலாலம்பூர், செப் 4
நாட்டின் நிதி நிலைமை மற்றும் அதன் ஆற்றலை பொறுத்தே அரசு அதிகாரிகளுக்கு போனஸ், சலுகைகள், வெகுமதிகள் வழங்கப்படும் என்று துணை நிதியமைச்சர் அமிருடின் ஹம்சா தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்திடம் அதிகமாக பணம் இருந்தால் மட்டுமே இவை யாவும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த போனஸ் மற்றும் வெகுமதிகளை வழங்குவதற்கு நாங்கள் கடன் வாங்கும் முறையை பின்பற்ற முடியாது என்றும் அரசிடம் அதிகமான பணம் இருந்தால் வழங்கப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

கொள்கை அளவில் இதுதான் உண்மையான நடவடிக்கை முறையாகும். நாட்டின் நிதி நிலைமை சீராக இருந்தால் போனஸ், மற்றும் சலுகைகள் வழங்கும் திட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று மேலவையில் அரசு உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more