கோலாலம்பூர் செப். 5-

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் இந்திய சிறுத் தொழில் முனைவர்கள் கடைகள் ஒதுக்கப்படுமா? இல்லையா? என்ற பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூட்டரசு பிரதேச அமைச்சர் சமாட் காலிட்டை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

கடந்த காலத்தில் தீபாவளி பெருநாளின் போது ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வழங்கப்பட்டதைப் போலவே தற்காலிக கடைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரிய முறையில் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

காலம் காலமாக நோன்பு பெருநாள், தீபாவளி காலங்களின் தற்காலிக கடைக்கான இடம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
சிறுவியாபாரிகள் கூடுதல் வருமானம் பெறுவதற்கும் பொது மக்களுக்கு கொள்முதல் செய்வதற்கு கூடுதல் வாய்ப்பாக இருந்து வந்துள்ளது.

அந்த கடைகள் இவ்வாண்டு வழங்கப்பட மாட்டது என சிறுதொழில் முனைவர்கள் அச்சம் தெரிவித்தனர். அவர்களது பிரச்சினையை கூட்டரசு பிரதேச அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். நேற்று காலை அவருடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது, கடைகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் அவருக்கு விளக்கினேன்.

இந்திய சிறுத்தொழில் முனைவர்களின் பிரச்சினைகளை அக்கறையுடன் செவிமடுத்த அமைச்சர், கடைகள் கிடைப்பத்ற்கான உரிய ஏற்பாட்டை செய்வதாக உறுயளித்தார். இந்திய தொழில்முனைவர்களின் கோரிக்கை குறித்து மாநகர் மன்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிப்பை செய்வேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய சிறுத் தொழில் முனைவர்களின் சார்ப்பில் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்று அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.