வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்தியர் சூப்பர் லீக் சாம்பியனை வீழ்த்தியது மிஃபா! நட்பு முறையாட்டத்தில் கலக்கல் வெற்றி
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

இந்தியர் சூப்பர் லீக் சாம்பியனை வீழ்த்தியது மிஃபா! நட்பு முறையாட்டத்தில் கலக்கல் வெற்றி

கிளானா ஜெயா, செப். 5-

இந்திய சூப்பர் லீக் சாம்பியனும், ஏ.எப்.சி கிண்ண ஆட்டங்களுக்கு தகுதி பெற்ற அணியுமான சென்னையின் எப்.சி அணியுடன் நமது சமுதாய அணி மிஃபா அனைத்துலக நட்புமுறையாட்டத்தில் களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் மிஃபா அணி பெனால்டி முறையில் 3-2 என்ற கோல்கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது.

நட்புமுறை ஆட்டமாக இருந்தாலும் இரண்டு அணிகளும் தனது வேகத்தை பிரதிபலித்தன. இந்த நட்பு முறையாட்டம் வெற்றி தோல்விகள் கடந்து இரு நாடுகளுக்குமிடையில் காற்பந்துத்துறை சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்தும் என மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் கூறினார்.

இரண்டு அணிகளும் திறம்பட செயல்பட்டதாக அணியின் தலைமைப்பயிற்றுநர் கே.தேவன் கூறினார். சென்னையின் எப்.சி இன் தலைமைப்பயிற்றுநர் ஜான் குறிப்பிடுகையில் மிஃபா தரம் வாய்ந்த சிறந்த அணி என வர்ணித்தார்.

மிஃபாவைப் பொறுத்தவரையில் மலேசிய கிண்ணப்போட்டிகளின் காலிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென செயல்பட்டு வருகின்ற நிலையில் இந்த வெற்றியானது உந்துதலாக இருக்குமென அணியின் நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி ராஜன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன