Homeமலேசியாஇந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக வேதமூர்த்தியின் புதிய கட்சி

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக வேதமூர்த்தியின் புதிய கட்சி

புத்ராஜெயா, செப்.8
மலேசிய இந்திய சமுதாயத்தின் நலனை கருதில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக மமுக எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்று அதன் இடைக்காலத் தலைவர் செனட்டர் பொ.வேதமூர்த்தி நேற்று அறிவித்தார்.

இக்கட்சியை அமைப்பதற்கான மனு ஆர்ஒஎஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒற்றுமை சமூக நலத்துறை அமைச்சருமான அவர் கூறினார்.

மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், சமயம், சமூகவியல் ஆகியவற்றில் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் இக்கட்சி அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு போராடுவதும் அவர்களது பொருளாதார நிலையை உயர்த்துவதும் இக்கட்சியின் முதன் நோக்கமாகும். இக்கட்சி இந்திய சமூகத்திற்கு புதிய நம்பிக்கையை உருவாகும்.

புதிய மலேசியாவின் கீழ் சீர்திருத்தங்களை வலுப்படுத்த நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்து இக்கட்சி செயல்படும் என்று அவர் சொன்னார்.

spot_img

latest articles

explore more