வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மீண்டும் சரித்திரம் படைத்தது மோஜோ இசைநிகழ்ச்சி! சமூக தளங்களில் பாராட்டு மழை!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மீண்டும் சரித்திரம் படைத்தது மோஜோ இசைநிகழ்ச்சி! சமூக தளங்களில் பாராட்டு மழை!

கோலாலம்பூர், செப் 10-

மலேசியாவின் இசை நிகழ்ச்சிகளை படைப்பதில் முதன்மையான தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மோஜோவின் எம்ஐஎல்எப்எப் இசை நிகழ்ச்சி இம்முறையும் தனி முத்திரை பதித்தது.

ரெட்ரோ ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு இவ்வாண்டின் மிகப் பெரிய இந்த இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை கோலாலமாக நடந்தது. முன்னணி பாடகர்களான பெனி டயால், ஆண்டிரியா ஆகியோர் கலக்கல் படைப்பு ரசிகர்களை சுண்டி இழுத்தது.

இந்த நிகழ்ச்சியை காண ஸ்டார் எக்ஸ்போ சென்டரில் கூடிய 2000க்கும் அதிகமான ரசிகர்கள் தங்களில் சமூக தளங்கில் இந்த நிகழ்ச்சி குறித்த கருத்துகளையும் விடியோகளையும் பகிர்ந்து வந்தார்கள்.

ரேபிட் மேக் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடினார். பின்னர் வீணையில் தனி முத்திரை படைத்த ராஜேஷ் வைத்தியாவுடன் சூப்பர் சிங்கர் புகழ் சத்திய பிரகாஷ், பூஜோ ஆகியோர் மேடையில் தோன்றினார்கள். ஆளப்போறான் தமிழன் என்ற பாடலோடு தமது படைப்பை தொடங்கினார் சத்திய பிரகாஷ். பூஜாவும் அவர் பாடிய புகழ் பெற்ற சினிமா பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

பின்னர் மேடையில் தோன்றிய இசையமைப்பாளர் ஷோன் ரோடன் தாம் இசையமைத்த பாடல்களை பாடினார். இந்த இசைக் குழுவில் பேஸ் கீட்டாரில் பின்னணி பாடகர் அலாப் ராஜூவும் இடம்பெற்றிருந்தார்.

அதன் பிறகு ஆண்டிரியா ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுண்டி இழுத்தார். 1 மணி நேரம் இடைவிடாமல், அவர் பாடல்களை பாடினார். ஆங்கில பாடல்களை பாடினாலும் அதற்கும் ரசிகர்கள் ஆட்டம் போட்டார்கள். ரசிகர்களை ஆரவாரத்தின் உச்சத்திற்கு ஆண்ட்ரியா கொண்டு சென்றார்.

அதன் பின்னர் மேடை ஏறிய பெனி டயால், தாமும் சளைத்தவன் இல்லை என்பதைப் போலவே வெறி பிடித்தவர் போல பாடினார். இடையில் உனக்கென வேணும் சொல்லு என்ற பாடல் பாடி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

5 மணிநேரம் இடைவிடாத இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் மனநிறைவு அடைந்தார்கள். குறிப்பாக மோஜோ சிறந்த முறையில் இசை நிகழ்ச்சியை தயாரிப்பதாக புகழாரம் சூட்டினார்கள். அடுத்த இசை நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரத்னகுமார் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக மோஜோ நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இனிவரும் காலங்களிலும் மோஜோ சிறந்த நிகழ்ச்சிகளை முன்னெடுக்குமென கூறிய அவர், உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்படுமென கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன