அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பெண்களுக்கு பிரம்படி : சரியான தண்டனைதான்! -டத்தோஸ்ரீ ஹாடி அவாங்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பெண்களுக்கு பிரம்படி : சரியான தண்டனைதான்! -டத்தோஸ்ரீ ஹாடி அவாங்

பெட்டாலிங் ஜெயா, செப்.10-

திரெங்கானு மாநிலத்தில் ஓரின சேர்க்கையில் (லெஸ்பியன்) ஈடுபட முயற்சி செய்ததன் பேரில் இரு பெண்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்கப்பட்டதை பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வரவேற்றுள்ளார்.

இந்த பிரம்படி சம்பவம் குறித்து சர்ச்சை எழுப்பியவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் வரையறுக்கப்பட்டிருக்கும் பிரம்படி தண்டனை இடையே உள்ள வேறுபாட்டை ஆராய வேண்டும் என்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் அவர் கூறினார்.

அவர்கள் அந்த வேறுபாட்டை அறிந்திருந்தால் முஸ்லிம் அல்லாதோர் கூட இஸ்லாமிய பிரம்படி தண்டனையைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்று செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட்ட அந்த ஒரு நிமிட காணொளியில் அப்துல் ஹாடி குறிப்பிட்டார்.

பிரம்படி விதிக்கப்பட்ட இவ்விரு பெண்கள் சம்பவத்தைவிட நிதியமைச்சர் லிம் குவான் எங் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது மிக முக்கியம் என்றார் அவர். ஓரின சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்ததாக இவ்விரு பெண்கள் மீது இம்மாதம் 3ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.

இவர்களுக்கு எதிராக ஷரியா நீதிமன்றம் 6 பிரம்படி விதித்தது. இவ்விவகாரம் அரசியல் மற்றும் பொது மக்கள் தரப்பில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்தப் பிரம்படி விவகாரத்தில் தமது அமைச்சரவை மனநிறைவு கொள்ளவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன