வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 17ஆவது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை மரணம்
முதன்மைச் செய்திகள்

17ஆவது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை மரணம்

பெட்டாலிங் ஜெயா, செப்.13
கோத்தா டாமான்சாராவிலுள்ள பிபிஆர் குடியிருப்பின் 17ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

இச்சம்பவம் இன்று காலை 7.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

வீட்டின் பால்கனியில் துருப்பிடித்த வேலியிலிருந்து அந்தக் குழந்தை தவறி விழுந்ததாகவும் சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நம்பப்படுகிறது.

அக்குழந்தையின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட வேளையில், 6 வயது அண்ணனை பள்ளியில் விட 14 வயது அக்கா சென்றபோது இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று அங்கு குடியிருக்கும் ஒருவர் குறிப்பிட்டார்.

அக்குழந்தையின் சடலம் சவப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ பெரிய மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன