வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மஇகா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக பொறுப்பேற்கிறார் உஷா நந்தினி!
அரசியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மஇகா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக பொறுப்பேற்கிறார் உஷா நந்தினி!

கோலாலம்பூர், செப். 13-

மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் பொறுப்பை நடப்புத் தலைவர் டத்தோ மோகனா முனியாண்டி தற்காத்துக் கொள்ளாததால் அப்பதவிக்கு நேரடிப் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உஷா நந்தினி போட்டியின்றித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

முன்னதாக மஇகா மகளிர் பிரிவின் தலைவர் பதவிக்கு கட்சியின் முன்னாள் புதிரி தலைவி உஷா நந்தினி போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தங்கராணி அப்பதவிக்கு போட்டிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அப்பதவிக்கு போட்டியிடுவதற்கு உறுதியாக இருந்த நிலையில் இப்போது, மகளிர் பதவிக்கு போட்டியில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

தங்கராணியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதால், உஷா நந்தினி போட்டியின்றித் தலைவர் பதவியில் அமர்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல், மகளிர் பிரிவின் துணைத் தலைவர் பதவியில் விக்கி பாபுஜி அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக கிருஷ்ணவேணி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருந்ததாகவும், அதுவும் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதனிடையே இவ்வாரம் சனிக்கிழமை நடக்கவிருந்த இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான வேட்புமனுத் தாக்கலும் அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய செயலவைக் கூட்ட முடிவுகள் கூறுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன