வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஒன் ஏர் ஆசியா;செலவினங்களை குறைக்கும் -டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்
முதன்மைச் செய்திகள்

ஒன் ஏர் ஆசியா;செலவினங்களை குறைக்கும் -டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூர், செப்.13
ஏர் ஆசியா நிறுவனம் தனது கூட்டு நிறுவனங்களை ஒன் ஏர் ஆசியா என ஒரே நிறுவனத்தின் கீழ் இணைக்க அதன் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் செலவினங்களை குறைக்க முடியும் என அவர் சொன்னார்.

தற்போது எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த மலிவு கட்டண விமான நிறுவனம் இன்னும் நீண்ட தூரம் விமான பயணங்களைச் சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது.

ஏர்ஆசியா எளிதாக மாற்றம் காண்பதற்கும் சந்தையை விரிவுப்படுத்தவும் எண்ணெய் விலை குறைந்து எங்களுக்கு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் சொன்னார்.

மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடங்கிய ஏர் ஆசியா நிறுவனத்தில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 256 கோடி வெள்ளி வருமானம் பதிவுச் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன