வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > நாட்டின் முன்னணி கலைஞர் அச்சப்பன் காலமானார் !
முதன்மைச் செய்திகள்

நாட்டின் முன்னணி கலைஞர் அச்சப்பன் காலமானார் !

கோலாலம்பூர், செப்.14-

நாட்டின் முன்னணி கலைஞர்களில் ஒருவரான அச்சப்பன் இன்று அதிகாலை காலமானார். 63 வயதுடைய சாமிநாதன் ரெத்தினம் என்ற அச்சப்பன் , சிறுநீரக செயலிழப்பு காரணமாக அதிகாலை 2.43 மணி அளவில் காலமானதாக அவரின் மகள் யுவேனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை மூன்று மணி அளவில் 12 ஏ, ஜாலான் பி.யூ 3/ 2 ஏ, தாமான் பூச்சோங் உத்தாமாவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரின் மகள் தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற அச்சப்பனுக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஸ்வரன் , டினேஸ்வரன், யுவேனேஸ்வரி என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

அச்சப்பன், தமிழ் மட்டுமின்றி மலாய் மொழி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக மலாய் மொழியில் வெளிவந்த பீ மாய் பீ மாய் தங் தூ, அவரின் நகைச்சுவை நடிப்பில் புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்றாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன