வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பி.கே.ஆர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டியதில்லை — அன்வார் !
முதன்மைச் செய்திகள்

பி.கே.ஆர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டியதில்லை — அன்வார் !

மலாக்கா, செப்.14-

போர்ட் டிக்சனில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலின் காரணமாக செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள பி.கே.ஆர் கட்சியின் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அக்கட்சியின் பொதுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக , பி.கே.ஆர் கட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அக்கட்சியின் தேர்தல் கேந்திரமும், உறுப்பினர்களும் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முழு கவனம் செலுத்தலாம் என அன்வார் தெரிவித்தார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிந்தப் பின்னர் , பி.கே.ஆர் கட்சி தனது தேர்தலை நடத்த வேண்டும் என அக்கட்சியின் உதவித் தலைவர் ஷம்சூல் இஸ்காந்தார் முகமட் அகின் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே பி.கே.ஆர் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தலைவர்கள் அடையாளம் கண்டு அவர்களைத் தேர்தெடுக்க வேண்டும் என அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார். மக்களுக்காக போராடும் கட்சியான பி.கே.ஆர்-ரில் போராட்டம் குணம் நிறைந்த தலைவர்களைத் தேர்தெடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன