வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > காவல்படைத் துணைத் தலைவரின் கூற்றில் உண்மையில்லை – ரோஸ்மா வழக்கறிஞர் !
முதன்மைச் செய்திகள்

காவல்படைத் துணைத் தலைவரின் கூற்றில் உண்மையில்லை – ரோஸ்மா வழக்கறிஞர் !

கோலாலம்பூர், செப்.14 :

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு தொடர்புடையதாக நம்பப்படும் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு யாரும் இதுவரை உரிமைக் கோரவில்லை என தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ நூர் ரஷீட் இப்ராஹிம் வியாழக்கிழமை தெரிவித்திருந்த கூற்றில் உண்மையில்லை என டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின்  வழக்கறிஞர் கூறுகிறார்.

ரோஸ்மா மற்றும் அவரின் இரண்டு பிள்ளைகளுக்கும் சொந்தமான பொருட்களை மீண்டும் பெறுவது தொடர்பில் போலீசுக்கு முறையான கோரிக்கை அனுப்பப்பட்டதாக வழக்கறிஞர் இஸ்காந்தார் ஷா இப்ராஹிம் தெரிவித்தார். எனினும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதால், போலீஸ் அந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என அவர் மேலும் சொன்னார்.

அந்த பொருட்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற போலீஸ், டத்தின் ஶ்ரீ ரோஸ்மாவை இன்னும் அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.  கடந்த ஜூலை 24, 25 ஆம் தேதிகளில், கைப்பற்றப்பட்ட பொருட்களை மீண்டும் பெறுவதற்கான கடிதம் புக்கிட் அமானின் சட்டவிரோத பண மாற்ற குற்றவியல் விசாரணை குழுவின் தலைவர்  டத்தோ காலில் அஸ்லான் சிக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் இன்னமும் விசாரணை மேற்கொள்ளப்படுவதால் அந்த பொருட்களைத் தற்போது ஒப்படைக்க இயலாது என டத்தோ காலில் கையெழுத்திட்ட கடிதம் தங்களுக்கு கிடைத்ததாக அவர் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன