அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > உரிமைகளை அறிந்துக் கொள்ளுங்கள்! – வான் அஜிஸா
அரசியல்முதன்மைச் செய்திகள்

உரிமைகளை அறிந்துக் கொள்ளுங்கள்! – வான் அஜிஸா

கெனிங்காவ், செப்.17 –

பயனீட்டாளர்கள் என்ற முறையில் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவதைத் தடுக்க தங்களின் உரிமை மற்றும் பங்களிப்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

அப்படி உங்களின் உரிமை மற்றும் பங்கு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால் சந்தையில் பொருள்களின் விலையை நீங்கள்தான் நிர்ணயிப்பீர்கள். ஒவ்வொரு முறையும் செலவழிக்கும் போது திட்டமிடுவதோடு கட்டுப்பாட்டில் இருந்தால் இதைச் செய்து விடலாம்.

அதனால் உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொளும் அதே சமயம் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அதன் விலையை மற்ற கடைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று மலேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பயனீட்டாளர்களுக்கான திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது வான் அஜிஸா குறிப்பிட்டார்.

இதனிடையே, வணிகர்களின் முறைகேடுகள் குறித்துப் புகார் செய்வதில் பயனீட்டாளர்கள் கண் மற்றும் காதாகச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

இதில் 019−2794317 என்ற எண்ணுடன் உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சுக்கு வாட்சாப் அனுப்பலாம். இதற்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

அமைச்சில் அதிகாரிகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில்தான் இருப்பதால் சரியான தடத்தின் வாயிலாகத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அரசுக்குப் பயனீட்டாளர்கள் உதவ வேண்டும் என்று மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சருமான வான் அஜிஸா மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன