திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கூட்டுப் பிடிப்பவர்களின் கவனத்திற்கு….! வெ.500,000 அபராதம், 10 ஆண்டு சிறை!
குற்றவியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கூட்டுப் பிடிப்பவர்களின் கவனத்திற்கு….! வெ.500,000 அபராதம், 10 ஆண்டு சிறை!

கோலாலம்பூர், செப்.17 –

கூட்டுப் பிடிப்பது என்பது ஒரு குற்றமாகும். இதில் அப்படி யாராவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு வெ.500,000 அபராதம் அல்லது 10 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.

இதில் கூட்டுப் பிடிப்பவர் அக்குழுவில் பிறர் கொடுத்த ஒட்டுமொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பி விடுவதாக இத்துறையின் முகநூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கூட்டுப் பணக் குழுத் தடுப்புச் சட்டம் 1971, 3ஆவதுப் பிரிவின் கீழ் கூட்டுப் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். இதில் யாராவது கூட்டு ஏற்பாடு செய்வது அல்லது கூட்டுப் பிடிப்பது கண்டுபிடித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் வெ.5 லட்சம் அபராதம் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று ஓர் அறிக்கையில் அத்துறை குறிப்பிட்டது.

இதனிடையே, இதில் விதிமுறை மீறப்படுவதைத் தவிர ஏமாற்று நடவடிக்கைகளும் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று அத்துறை வலியுறுத்தியது.

அப்படிக் கூட்டுப் பிடித்தவர் தப்பி விட்டால் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் நீங்கள் புகார் செய்யலாம். இதுபோன்ற சம்பவங்கள் விசாரணை செய்ய பொதுவாக மலேசிய நிறுவன ஆணையத்திடம் (எஸ்எஸ்எம்) ஒப்படைக்கப்படும் என்று அத்துறை மேலும் கூறியது.

முன்னதாக ஜோகூர், சிகாமாட்டில் கடந்த ஜூன் 3ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் கூட்டுப் பிடித்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் தப்பியோடியதில் ஒரு பெண்ணுக்கு பல்லாயிரக்கணக்கான வெள்ளி இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பன்மடங்கு இலாபம் கிடைக்கும் என்று கூட்டுப் பிடித்த பெண்ணின் பேச்சைக் கேட்டு இதில் இடம் பெற்ற பெரும்பாலானக் குடும்பப் பெண்களில் வெ.200 முதல் 4,500 வரை முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன