திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஈப்போ பெரிய மருத்துவமனை மேம்பால நடைபாதை சுவரில் பிளவா?
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஈப்போ பெரிய மருத்துவமனை மேம்பால நடைபாதை சுவரில் பிளவா?

ஈப்போ டிச. 20-

இங்கு ராஜா பெர்மைசூரி துங்கு பைனுன் மருத்துவமனையின் (பெரிய மருத்துவமனை) அருகில் உள்ள மேம்பால நடை பாதை சுவரில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அது சீரமைப்புக்கு மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள், அதன் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அந்த சாலையில் ஏற்படும் விபத்தை தவிர்க்க அங்கு இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டு அதனை பல ஆண்டு காலமாக பன்படுத்தி வந்துள்ளனர்.

இன்று அந்த மேம்பால சுவரில் ஏற்பட்டுள்ள பிளவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகனமோட்டிகளுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்த இடத்திற்கு வருகை தந்த கெப்பாயாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கோ சுங் சென் அந்த மேம்பாலத்தை பார்வையிட்டு அதன் விவரங்களையும் சேகரித்தார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த சாலையை கடந்த கனரக லோரி ஒன்று அதனை மோதியதின் விளைவு அதில் பிளவு ஏற்பட காரணம் என்று தெரிய வருகிறது. அதில் ஏற்பட்டுள்ள பிளவு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அது தொடர்பாக பொதுப் பணி இலாகா மற்றும் அதனை நிர்மாணித்த குத்தகையாளர்கள் நிறுவனத்திடமிருந்து முழு அறிக்கைக்காக காத்திருப்பதாக மாநில சுகாதார பிரிவிற்கு பொறுப்பேற்றுள்ள ஏ. சிவநேசன் கருத்துரைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன