ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

சென்னை, டிச 21
சுமார் 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) இன்று காலமானார்.

கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் பிரபஞ்சன் இன்று காலமானார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன