திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டத்தோ அஸ்வான்டினுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

டத்தோ அஸ்வான்டினுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்

கோலாலம்பூர், டிச 27
பேரணி ஒன்றில் தரக்குறைவாக உரையாற்றியதால் நேற்று கைது செய்யப்பட்ட டத்தோ அஸ்வான்டின் ஹம்சா அரிபினுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.

டத்தோ அஸ்வாண்டினின் வழக்கறிஞர் டத்தோ முகமட் இம்ரான் தாம்ரின் இதனை உறுதிபடுத்தினார்.

ஜாரிங்கான் மிலாயு மலேசியா எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவரான அவர் செவ்வாய்கிழமை கிள்ளானில் நடைபெற்ற பேரணியில் மற்றவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதால் நேற்று கைது செய்யப்பட்டார்.

பிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேதமூர்த்தியை தரக்குறைவாக பேசியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 504,506 ஆகிய விதிகள் கீழ் விசாரிக்கப்பட்டார்.

அதோடு, சீபில்ட் ஆலய கலவரத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படாவிடில் போலீஸ் நிலையத்தை தாக்குவோம் என்றும் அவர் பேசியிருக்கின்றார்.

இந்நிலையில், டத்தோ அஸ்வாண்டினை இன்று தொடங்கி 4 நாட்களுக்கு தடுத்து வைக்க மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன