செர்டாங், டிச 28
சுங்கை பிசி நெடுஞ்சாலையில் இன்று காலை 7.00 மணியளவில் சுமார் 30 கார்கள் பழுதடைந்து நின்றன.
சம்பந்தப்பட்ட அனைத்து கார்களின் எஞ்சின்கள் பழுதடைந்ததாக தெரிகிறது. அந்த நெடுஞ்சாலையிலுள்ள பெர்ரோனாஸ் எண்ணெய் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிய பின்னரே அந்த கார்கள் யாவும் பழுதடைந்ததாக தெரிகிறது.
இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த எண்ணெய் நிலையத்தில் பெட்ரோலில் டீசல் கலக்கப்பட்டுள்ளதாகவும் அதே வேளையில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த பெட்ரோல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பெட்ரோனாஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் இதில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகளிடம் தாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பெட்ரோனாஸ் குறிப்பிட்டுள்ளது.


