புத்ராஜெயா, ஜன 2
எண்ணெய் விலை குறித்து தங்களின் வருத்தத்தை வெளியிடும் வகையில் பிடிஏஎம் மலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளும் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் சந்திப்புக் கூட்டம் நடத்தினார்.
மகாதீர் நேற்று கூறியிருந்தது போலவே இந்தக் கூட்டம் நடைபெற்றது. பெர்டானா புத்ராவில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் சுமார் 45 நிமிடங்கள் பிடிஏஎம் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அஜிஸ் உட்பட இதர 4 பிரதிநிதிகளுடன் இந்தச் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் எண்ணெய் விலை குறித்து பிடிஏஎம்மின் கவலை மற்றும் பிரச்னை குறித்து நடத்தப்பட்டதாக டத்தோ கைருல் அனுவார் தெரிவித்தார்.
பிரதமரிடம் தங்களது அனைத்துப் பரிந்துரைகளை முன்வைத்ததாகவும் அவர் தங்களின் நிலையை நன்கு புரிந்துக் கொண்டுள்ளார் என்று தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.


