ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 2019- ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் !
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

2019- ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் !

சென்னை: இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் பற்றி பார்ப்போம்.

2019ம் ஆண்டு பிறந்துவிட்டது. பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இரண்டு படங்களையும் கொண்டாட ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு எதிபார்க்கப்படும் படங்களின் விபரங்களை பார்ப்போம்.

1 ) பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. ட்ரெய்லரை பார்த்தபோது ரொம்ப காலம் கழித்து ரஜினியை பழையபடி பார்த்தது போன்று இருந்தது. அதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2 ) விஸ்வாசம்

அஜித் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 10ம் தேதி வெளியாகிறது. விஸ்வாசம் ட்ரெய்லர் மிரட்டலாக இருந்தது. ட்ரெய்லரே இப்படி என்றால் மெயின் பிக்சர் மரண மாஸாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

3) தளபதி விஜய்

தெறி, மெர்சல் படங்களை அடுத்து அட்லி, விஜய் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படம் தளபதி 63. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் 16 பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக வருகிறாராம் விஜய். ஃபிட்டாக இருக்கும் விஜய் கோச்சாக நடிப்பதை பார்க்கும் ஆவல் எழுந்துள்ளது.

4) சூர்யா

சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டே இருக்கும் என்.ஜி.கே. படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். செல்வராகவன் எந்த அப்டேட்டும் கொடுக்காவிட்டாலும் படம் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். அதேவேளையில் கே.வி. ஆனந்த இயக்கத்தில் நடிக்கும் காப்பான் படமும் இந்த ஆண்டில் வெளி வரவிருக்கிறது.

5) விக்ரம்

விக்ரம் கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கடாரம் கொண்டான் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

6) விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் முகத்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

7) சிவகார்த்திகேயன்

நேற்று இன்று நாளை புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே. 14 படம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கார்த்தி 18, நயன்தாராவின் ஐரா, த்ருவ் விக்ரமின் வர்மா, அமலா பாலின் ஆடை ஆகிய படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஆகும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன