திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 15 பேர் பலி; 20 பேர் மாயம்
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 15 பேர் பலி; 20 பேர் மாயம்

ஜகார்த்தா, ஜன 2
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா பகுதியில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் புதையுண்டன. அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுகபூமி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் மூடப்பட்டன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மீட்பு பணி குறைந்துள்ளது. உயிரழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன