திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பெட்ரோல் விலையில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை
அரசியல்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலையில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை

புத்ராஜெயா, ஜன. 3-

பெட்ரோல் எண்ணெய் விலை தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

இதில் கடந்த செவ்வாய்க்கிழமை (1ஆம் தேதி) அமல்படுத்தியிருக்க வேண்டிய வார எண்ணெய் மிதவை முறை குறித்து ஆய்வுச் செய்யப்பட்டு வருவதால் அது சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவையின் தொடக்கக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.

பத்திரிகைக் கூட்டத்திலும் இதுகுறித்து அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் கிடைக்கவில்லை என்று பிரதமர் மற்றும் நிதியமைச்சர் அலுவலகப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

இருந்த போதிலும் இவ்வாண்டின் முதல் வாரத்தில் எண்ணெய் விலையில் எந்த மாற்றமுமின்றி நிலைநிறுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

முன்னதாக புதிய விலை அறிவிக்கப்படும் முன்பு நடப்பிலுள்ள ரோன்95, ரோன்97, டீசலின் விலை வெ.2.20, வெ.2.50, வெ.2.18 என தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அரசு கூறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன