திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புகை பிடிக்கத் தடை: அமலாக்க அதிகாரிகள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்!
அரசியல்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்

புகை பிடிக்கத் தடை: அமலாக்க அதிகாரிகள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்!

புத்ராஜெயா, ஜன.3

பிடிவாதமாக இருக்கும் புகை பிடிப்பவர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சின் சின்னம் பொரித்த மேலங்கி அணிந்த அதிகாரிகள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் திட்டவட்டமாகக் கூறினார்.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சின் பெயர் மற்றும் சின்னம் பொரிக்கப்பட்ட கருப்பு மேலங்கியை அணிந்திருப்பர்.

இதன் மூலம் அவர் உண்மையான அதிகாரியா அல்லது போலியா என்பதை நீங்கள் அடையாளம் காண முடியும். இதில் அமைச்சின் அதிகாரியைப் போல் நடித்துப் பொது இடங்களில் புகை பிடித்ததற்கான அபராதத்தைக் கேட்பவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வரும் ஜூன் மாதம் வரை இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்பதால் அமலாக்க அதிகாரிகள் எந்த அபராதத்தையும் விதிக்க மாட்டார்கள் என்று அமைச்சின் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ஸுல்கிப்ளி குறிப்பிட்டார்.

முன்னதாக இந்தப் புகை பிடிப்பதற்கானத் தடையைக் கடந்த 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அமைச்சு அமல்படுத்தியது.

இதனிடையே இதன் தொடக்க நாளில் அமைச்சு மேற்கொண்ட கண்ணோட்டத்தின்படி உணவகங்களில் புகை பிடித்தோருக்கு எதிராக 1,453 சம்மன்கள் விதிக்கப்பட்டன.

இதில் புகை பிடிக்கும் தடைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த 24 மணி நேர உணவகங்கள் உட்பட 2,786 உணவகங்கள், உணவுக் கடைகளை அமைச்சு உட்படுத்தியது.

அதோடு 7451 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது மட்டுமின்றி 3,879 பேருக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன என்று கோல சிலாங்கூர் தொகுதி எம்.பி.யுமான ஸுல்கிப்ளி மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன