திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > விமான நிலையங்களில் கிரேப் ஓட்டுகின்றீர்களா? காத்திருக்கின்றது சம்மன்!!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

விமான நிலையங்களில் கிரேப் ஓட்டுகின்றீர்களா? காத்திருக்கின்றது சம்மன்!!

ஜோர்ஜ்டவுன், ஜன. 3-

சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) கடந்த செவ்வாய்க்கிழமை சம்மன் விதித்ததைத் தொடர்ந்து பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளை கிரேப்கார், மின்னியல் டாக்சி ஓட்டுநர்கள் ஏற்றிச் செல்வதில்லை.

பொதுவாக இங்கு இவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அதற்கான கோரிக்கைகளும் அதிகரித்து வந்தன. இருந்த போதிலும் அமலாக்கத் தரப்பினரின் கடும் நடவடிக்கையால் அவர்களை அங்கு நுழைய விடாமல் தடுத்தது.

இதனிடையே, கிரேப்கார் ஓட்டுநர்களுக்கு ஜேபிஜே சம்மன் விதித்தது முதல் தாங்கள் அவ்விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் ஓட்டுநர் தெரிவித்தார்.

இதில் அனுமதிக்கப்பட்டதைப் போல் இப்போது அங்கு சென்று பயணிகளை விட்டு விட்டு வருகிறோம். ஆனால் அங்கிருந்து யாரையும் ஏற்றிச் செல்வதில்லை. அப்படி இது தொடர்பில் அமலாக்கத் தரப்பினர் கண்டுபிடித்து விட்டால் கிரேப்கார், மின்னியல் டாக்சி ஓட்டுநர்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

அதனால் தங்களின் வருமானத்திற்கு வேறு பகுதி நேரத் தொழிலை கிரேப்கார், மின்னியல் டாக்சி ஓட்டுநர்கள் பார்ப்பதுதான் சிறந்தது என பத்திரிகையாளர்களிடம் 47 வயது கொண்ட அவர் குறிப்பிட்டார்.

இதில் சம்மன் விதிக்கப்பட்ட அவர் வரும் ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன