முகப்பு > முதன்மைச் செய்திகள் > தாய்லாந்து அனைத்துலக மாஸ்டர் ஓட்டப்பந்தயம் : 15 தங்கப்பதக்கம் வெல்ல மலேசியா இலக்கு
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

தாய்லாந்து அனைத்துலக மாஸ்டர் ஓட்டப்பந்தயம் : 15 தங்கப்பதக்கம் வெல்ல மலேசியா இலக்கு

கோலாலம்பூர், ஜன. 3-

தாய்லாந்து அனைத்துலக ஓட்டப்பந்தய போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து 52 போட்டியாளர்கள் பங்கு பெறுவார்கள் என மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சிவசம்பு கூறினார்.

இப்போட்டிகள் எதிர்வரும் மார்ச் திங்கள் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தாய்லாந்தின் நக்கோன் சாவான் நகரில் நடைபெறும்.

24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15 நாடுகளிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட 52 மலேசிய போட்டியாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கடினமான தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்திருப்பதால் 15 தங்கப்பதக்கங்களை பெறுவார்கள் என்று முன்னாள் மலேசிய ஓட்ட காரரான சிவப்பிரகாசம் உறுதியாக கூறினார்.

டத்தோஸ்ரீ டாக்டர் வி.புலேந்திரன் 800 மீட்டர் 1500 மீட்டர் ஆகிய இரு போட்டிகளில் பங்கு பெறுவதால் இரண்டு பதக்கங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார் அவர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற அனைத்து உலக போட்டியில் 800 மீட்டர் 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஆகிய மூன்று போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் முன்னாள் அனைத்துலக நீண்டதூர ஓட்டக்காரர்கள் இந்திய மாஸ்டர் ஓட்டப்பந்தய சங்கத்தின் கௌரவத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கலந்து கொள்ளும் பிரிவுகளை தவிர்த்து இதர 13 தங்கப் பதக்கங்களை மலேசியா குறிவைத்துள்ளது. இந்த இலக்கை நிச்சயம் எட்ட முடியும் என சிவப்பிரகாசம் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன