வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை நிலப் பிரச்னை; சிறப்பு பணிக்குழு அமைக்க திட்டம் -டாக்டர் சேவியர் ஜெயகுமார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை நிலப் பிரச்னை; சிறப்பு பணிக்குழு அமைக்க திட்டம் -டாக்டர் சேவியர் ஜெயகுமார்

கேமரன் மலை, ஜன. 5
கேமரன் மலையிலும் லோஜிங்கிலும் ஏற்படும் நிலப்பிரச்னைக்கு உதவ சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்படும் என்று நீர், நில,இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

காடுகளில் சட்டவிரோதமாக காடுகளை அழித்தல், சட்டவிரோதமாக விவசாய பண்ணைகளை நடத்துதல் போன்ற பிரச்னைகளை அந்தப் பணிக்குழு ஆராய்ந்து அதனைத் தடுக்கப் பரிந்துரை அளிக்க பணிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அங்குள்ள நிலச் சரிவுகளையும் வெள்ளத்தையும் தடுக்க மத்திய அரசு அதிகமாக செலவிட்டிருந்தாலும் மாநில அரசிடமிருந்து ஒத்துழைப்பை பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கை ரிங்லெட் வெள்ளத்தடுப்புத் திட்டத்திற்கு அரசு வெ. 40 கோடியைச் செலவிட்டுள்ளதாகவும் ஆனால் ஊடுருவல்காரர்கள் எந்தவொரு அனுமதியும் இன்றி, தற்காலிக நில உரிமமும் இன்றி நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

எனவேதான், அவற்றை முறியடிக்க அமைச்சு, மாநில அரசு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அமைச்சு மற்றும் துணைப் பிரதமர் துறை அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சேவியர் செய்தியாளார்களிடம் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் இம்மாதம் 26ஆம் தேதி கேமரன் மலை இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.மனோகரனும் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன