வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா !
முதன்மைச் செய்திகள்

ஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா !

கோலாலம்பூர், ஜன.7-

நாட்டின் 16 ஆவது மாமன்னர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி பதவியேற்பார் என இஸ்தானா நெகாரா சற்று முன்னர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.  அதேவேளையில் புதிய மாமன்னரைத் தேர்தெடுப்பதற்கான கூட்டம் மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் கூட்டம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இஸ்தானா நெகாராவில் காலையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அரச முத்திரை காப்பாளர் டான் ஶ்ரீ சயிட் டானியல் சயிட் அஹ்மாட் பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  நேற்று (ஞாயிற்றுக்கிழமை), சுல்தான் முகமட், மாமன்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தப் பிறகு அனைத்து மாநில ஆட்சியாளர்களின், இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

நாட்டின் 15-வது மாமன்னராகக் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, சுல்தான் முகமட்,மலேசியஆட்சியாளர்களின்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் வருகிற 2021-ல் முடிவடையும் வேளையில், நேற்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன