செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு !
விளையாட்டு

ஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு !

லண்டன், ஜன.7-

அர்செனல் மத்திய திடல் ஆட்டக்காரர் ஏரோன் ரம்சே, ஜனவரி மாதம் அந்த கிளப்பை விட்டு வெளியேற மாட்டார் என கூறப்படுகிறது. அர்செனல் கிளப்புடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பட்சத்தில் வரும் ஜூன் மாதம் வரையில் அந்த கிளப்பில் தொடர்ந்து நீடிக்க ஏரோன் ரம்சே திட்டமிட்டுள்ளதாக ஈ.எஸ்.பி.என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் அர்செனல் கிளப்பின் நிர்வாகம் , வாரம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பவுன்ட் ஸ்டேர்லிங்கை சம்பளமாக வழங்கும் ஒப்பந்தத்தை ரம்சே நிராகரித்துள்ளார்.  இத்தாலியின் யுவன்டஸ், ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் , ரம்சேவை வாங்குவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான லிவர்பூலும், ரம்சேவை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஜூன் முதல் தேதி வரையில் அவர் இங்கிலாந்து கிளப்புகளுடன் பேச்சுகளை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அர்செனல் கிளப்பில் ரம்சே தொடர்ந்து நீடிப்பது குறித்து, அதன் நிர்வாகி உனய் எமெரி , செய்தியாளர்கள் சந்திப்பில் எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன