செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இங்கிலாந்து எப்.ஏ கிண்ணப் போட்டி – நான்காவது சுற்றில் மோதும் மென்செஸ்டர் யுனைடெட் , அர்செனல்
விளையாட்டு

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணப் போட்டி – நான்காவது சுற்றில் மோதும் மென்செஸ்டர் யுனைடெட் , அர்செனல்

லண்டன், ஜன.8-

2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றில் அதிக முறை கிண்ணத்தை வென்றுள்ள அர்செனலும், மென்செஸ்டர் யுனைடெட்டும் மோதவிருக்கின்றன. இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்கான குலுக்கல் திங்கட்கிழமை லண்டனில் நடைபெற்றது.

இதில் அர்செனல் தனது சொந்த அரங்கில் மென்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்கவிருக்கிறது. அதேவேளையில், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, தனது சொந்த அரங்கில் பெர்ன்லியை சந்திக்கவிருக்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், கிறிஸ்டல் பேலசை எதிர்க்கொள்ளும் வேளையில், நடப்பு வெற்றியாளரான செல்சி, ஷெபீல்ட் வெனேஸ்டே அல்லது லூட்டனைச் சந்திக்க விருக்கிறது.  மூன்றாவது சுற்றில் லிவர்பூலை வீழ்த்தி அதிரடி படைத்த வோல்வர்ஹாம்ப்டன், ஷ்ரூஸ்பேர்க் அல்லது ஸ்டோக் சிட்டியை சந்திக்க விருக்கிறது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜனவரி 25  தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன