திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > இந்திய ஆடவர் கொலை; ஷா ஆலாமில் சம்பவம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

இந்திய ஆடவர் கொலை; ஷா ஆலாமில் சம்பவம்

ஷா ஆலாம், ஜன.8-
இங்குள்ள செக்ஷன் 7, பிகேஎன்எஸ் கட்டத்தின் கீழ் மாடியில் பிகேஆர் உறுப்பினர் தியாகு மாரிமுத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

நேற்று மாலை 5.00 மணியளவில் புரோட்டோன் வாஜா காரில் வந்த பாராங் கத்தி ஏந்திய கும்பல் ஒன்று தியாகுவை (வயது 30) கொடூரமாக தாக்கியதாக ஷா ஆலாம் போலீஸ் தலைவர் ஏசிபி பஹாருடின் மாட் தாயிப் தெரிவித்தார்.

பின்னர் அங்குள்ள பொதுமக்கள் ஷா ஆலாம் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இச்சம்பவத்தில் தியாகுவுக்கு தலை, முகம், வலது கை, இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையை ஏதும் பலனளிக்காததால் மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீஸ் 302ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்து வருகிறது.

அதனால் இக்கொலைச் சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என்று ஓர் அறிக்கையில் பஹாருடின் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 25 வயதிற்குட்பட்ட அவர்கள் இன்று தொடங்கி 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு துறையின் தலைவர் பாட்சில் அஹமாட் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன