சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடி; ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணிக்கிறது
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடி; ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணிக்கிறது

கோலாலம்பூர். பிப். 27-

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணித்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பதட்ட நிலையை தொடர்ந்து வட இந்தியாவுக்கான விமான சேவைகள் குறித்து ஏர் ஆசியா மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது.

வட இந்தியாவின் நிலைமையை நாங்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம். குறிப்பாக அமிர்தரஸ் மற்றும் ஸ்ரீநகருக்கான விமான சேவைகளின் தாக்கங்களை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். அணிகள் தங்களது பயண விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் முடியும் என டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஏர் ஆசியா கேட்டுக்கொண்டது.

இந்தியாவுடனான பதட்ட நிலையை தொடர்ந்து தனது வான் பகுதியை  மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

அனைத்து வர்த்தக விமான  சேவைகளுக்கான வான்பகுதியை மூடுவதாக பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதேவேளையில் amirtaras , சண்டிகர், டேராடூன்,  ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகர் களுக்கான விமான சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி   இருப்பதாக அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன