புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இன விவகாரத்தை பயன்படுத்தாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இன விவகாரத்தை பயன்படுத்தாதீர்

செமினி, பிப் 27-

செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது இன விவகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு  நினைவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸ் பேசியிருப்பதாக கூறப்படும் இன விவகாரம், அந்த தென் சிலாங்கூர் பகுதியில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்திருப்பதாக பெர்சத்து மாவட்ட வாக்களிப்பு மைய தகவல் பிரிவு தலைவர் முகமட் பெளசி டாவுட் தெரிவித்திருக்கிறார்.

செமினி தொகுதி, மலாய்க்காரர், சீனர் மற்றும் இந்தியர் ஆகிய மூவின மக்களிடையே ஒன்றுமையை பிரதிபலிக்கும் ஒரு பகுதியாக விளங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுய மற்றும் இன விவகாரங்களை எழுப்பாமல், ஆரோக்கியமான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன