செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > அதிகரிக்கும் வெப்பம்; வெளிநடவடிக்கைகளை குறைத்து கொள்வீர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

அதிகரிக்கும் வெப்பம்; வெளிநடவடிக்கைகளை குறைத்து கொள்வீர்

கோலாலம்பூர், பிப் 27-

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

வெயிலில் நின்றாலோ அல்லது நடந்துச் சென்றாலோ உஷ்ணத்தை உணர முடியக் கூடிய அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக உள்ளது.

இந்நிலை ஏப்ரல் மாத இறுதி வரையில் நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த வெப்பம் வயதானவர்களையும் சிறுவர்களையும் பாதிக்கும் என்பதால், வெளி நடவடிக்கைகளை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றனர்.

மக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வெளியில் செல்லும்போது பாதுக்காப்புடன் செல்ல வேண்டும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார்.

தற்போது இருக்கும் வெப்பநிலையில் வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உடலின் வெப்ப அளவும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் அதிக அளவில் நீர் அருந்துவதும் அவசியம் என்று அவர் கூறினார்.

பள்ளிக்கூடங்களில், விளையாட்டு போன்ற வெளி நடவடிக்கைகளை ஆசிரியர்கள் குறைத்துக் கொள்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன