Homeஅரசியல்அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ மாட்டார்கள் -முகமட் ஹசான் நம்பிக்கை

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ மாட்டார்கள் -முகமட் ஹசான் நம்பிக்கை

கோலாலம்பூர், மார்ச் 1–

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியும் எவரும் கட்சி தாவ மாட்டார்கள் என அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

அவர்கள் இனியும் கட்சி தாவுவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை என அவர் கூறினார்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அவர் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு எந்த ஒரு அவசியமும் இருக்காது என அவர் கூறினார்.

இப்போது அம்னோ அமைதியாக இருக்கிறது. எனவே, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் சொன்னார்.

அம்னோவை வலுப்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும்  நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்  என்று முகமட் ஹாசன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியில் இருந்து அம்னோ உறுப்பினர்கள் எவரும் நம்பிக்கை கூட்டணிக்கு தாவமாட்டார்கள் என்றும் அவர் சொன்னர். அதோடு பாஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி தாவ மாட்டார்கள் என்றும் முகமட் ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

அம்னோவில் இப்போது உட்கட்சி பூசல் எதுவும் கிடையாது .கட்சி அமைதியாக இருக்கிறது. எனவே அம்னோ உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேற மாட்டார்கள் என்றும் அவர் சொன்னார்.

spot_img

latest articles

explore more