திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பத்துகாஜாவில் புயல் வீசியது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பத்துகாஜாவில் புயல் வீசியது!

பத்துகாஜா, மார்ச் 1-

பத்துகாஜாவில்  கடும் மழையுடன் தாக்கிய புயலால் பல்வேறு இடங்களில் சேதமடைந்தன.

 பல பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீடுகள் பல சேதமடைந்தன.

நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில்  உயிருடச் சேதங்கள் நிகழவில்லை. இதில் பல வீடுகளின் கூரைகள் புயலில் பாதிக்கப்பட்டதாக மாவட்ட மன்ற உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்தார் .

இங்கு டேசா  சங்காட் எனும் இடத்தில்  அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு  உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் தெரிவித்தார்.

அலங்கோல காட்சி அளித்த பத்துகாஜா நகரை சுத்தப்படுத்த மாவட்ட மன்ற  ஊழியர்கள் துப்பரவு  பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன